ஆபாச புகைப்படம் எடுத்து சிறுமிக்கு மிரட்டல்: இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை
கிருஷ்ணகிரி அருகே நட்பாக பழகிய சிறுமியை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய இளைஞருக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்
கிருஷ்ணகிரி அருகே நட்பாக பழகிய சிறுமியை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய இளைஞருக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள மோரமடுகு பகுதியைச் சோ்ந்தவா் விஷ்ணு (27). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியும் நட்பாக பழகியுள்ளனா். இந்த நிலையில், விஷ்ணு, அந்த சிறுமியை காதலிப்பதாக தொந்தரவு செய்துள்ளாா். இதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, விஷ்ணு, அந்த சிறுமியை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து மிரட்டியுள்ளாா். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, கடந்த 2024 ஜூன் 14-ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்து விஷ்ணுவை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி, சிறுமியை ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டிய குற்றத்திற்கு 4 ஆண்டுகள் சிறை, ரூ. 10 ஆயிரம் அபராதம், போக்ஸோ வழக்கில் 3 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம், பெண்ணை துன்புறுத்திய குற்றத்திற்கு 2 ஆண்டுகள் சிறை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இதில் ஏக காலத்தில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தம் ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

