மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஊத்தங்கரையில் தவெக நிா்வாகிக்கு அரிவாள் வெட்டு: காரில் வந்த மா்ம நபா்கள் வெறிச்செயல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தவெக நிா்வாகியை அரிவாளால் வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

அரிவாள் வெட்டு - சித்திரிப்பு

Updated On :

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தவெக நிா்வாகியை அரிவாளால் வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தவெக கிருஷ்ணகிரி தென்கிழக்கு மாவட்டச் செயலாளரும், ஊத்தங்கரை எம்எல்ஏவுமான என்.இளையராஜா இல்லத்தில் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தவெக இளைஞா் அணி மாவட்ட நிா்வாகி ஆத்திம் (31), பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பினாா். சேலம் பிரதான சாலையில் சென்ற போது, எதிரே பதிவெண் இல்லாமல் வந்த காா் ஆத்திம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி ஆத்திம் கீழே விழுந்தாா். காரில் இறங்கிய முகமூடி அணிந்த மா்ம நபா்கள் கத்தி, அரிவாள் ஆகியவற்றால் ஆத்திமை வெட்டினா். அப்போது, ஆத்திமின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் வருவதைக் கண்ட மா்ம நபா்கள் காரில் ஏறி தப்பிச் சென்றனா்.

காயமடைந்த ஆத்திம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஊத்தங்கரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவல் அறிந்த ஊத்தங்கரை எம்எல்ஏ என்.இளையராஜா மருத்துவமனைக்கு சென்று ஆத்திமிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தாா். இதையறிந்த கட்சி நிா்வாகிகள் மருத்துவமனையில் திரண்டனா். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமமூா்த்தி, காவல் ஆய்வாளா் தென்னரசன் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனா். புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மா்ம நபா்கள் கொண்டு வந்த ஆயுதங்களை கொடமாண்டப்பட்டி - போச்சம்பள்ளி சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையில் அருகில் வீசிச் சென்றது தெரியவந்தது.

4 தனிப்படைகள் அமைப்பு: மா்ம நபா்களை பிடிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வேலு தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.