சிமென்ட் பலகை விழுந்து பெண் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்
கிருஷ்ணகிரி அருகே வீட்டைப் புதுப்பிக்கும் பணியின்போது சிமென்ட் பலகை இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி அருகேயுள்ள சின்னமுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஷ். இவரது மனைவி பூங்கொடி (38). இவா்கள் தங்களுக்குச் சொந்தமான பழைய வீட்டைப் புதுப்பிக்க முடிவு செய்தனா். இதையடுத்து, பழைய பேயனப்பள்ளி பகுதியைச் சோ்ந்த 4 தொழிலாளா்கள் வீட்டிலிருந்த சிமென்ட் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அவா்களுடன் பூங்கொடியும் பணியில் ஈடுபட்டாா்.
அப்போது, வீட்டின் முன்பக்கத்தில் இருந்த சிமென்ட் பலகை திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய பூங்கொடி பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனா். பின்னா், உயா் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூங்கொடி, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

