மாணவியைக் காணவில்லை

ஜேடர்பாளையம் அருகே பாகம்பாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி காணாமல் போனது குறித்து ஜேடர்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜேடர்பாளையம் அருகே பாகம்பாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி காணாமல் போனது குறித்து ஜேடர்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகம்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இறுதியாண்டு படித்து வந்தார். இவர், கடந்த 9-ஆம்  தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இரவு வெகு நேரம் ஆகியும் மகள் வராததால் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கல்லூரி மாணவியின் தந்தை சண்முகம் ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் தனது மகளைக் கண்டுபிடித்து தருமாறு அளித்த புகாரின்பேரில் ஜேடர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து மாணவியைத் தேடிவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com