கஜா புயல் பாதிப்பு: இரு குடும்பங்களுக்கு நிவாரண உதவி

நன்செய் இடையாறில் கஜா புயலால் மரக்கிளை முறிந்து விழுந்ததில் வீடுகள் சேதமடைந்தன.

நன்செய் இடையாறில் கஜா புயலால் மரக்கிளை முறிந்து விழுந்ததில் வீடுகள் சேதமடைந்தன.  8 பேர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு வருவாய்த் துறையினர் மற்றும் பரமத்திவேலூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார்.
நன்செய் இடையாறில் முனியப்பசுவாமி கோயில் உள்ளது. இக் கோயிலுக்கு அருகே ஆஸ்பெட்டாஸ் சீட் வேயப்பட்ட 5 வீடுகள் உள்ளன. வீடுகளுக்கு அருகே மிகவும் பழைமை வாய்ந்த அரச மரம் உள்ளது. கஜா புயல் காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழை மற்றும் காற்றால் அரச மரத்தின் பெரிய கிளை ஒன்று ஒடிந்து சிவா மற்றும் கோபால் ஆகியோரது வீடுகளின் மீது விழுந்தது.
இதில் வீட்டினுள் இருந்த சிவா அவரது மனைவி வீரமணி, வீரமணியின் தாய் அலமேலு, மகன் சக்தி ஆகியோரும் மற்றொரு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கோபால் அவரது மனைவி கலா, மகள் ஹரிப்பிரியா,மகன் சந்தோஷ் ஆகியோரும் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினர்.
வீட்டிலிருந்து பொருள்கள்,  மேற்கூறை, சுவர்கள் இடிந்து நாசமானது குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, மோகனூர் மண்டல துணை வட்டாட்சியர் விஜயகாந்த் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com