பழங்குடியினருக்கு பட்டா வழங்க தாமதம்: தேசியக் கட்சிகள் மீது குற்றச்சாட்டு

பல ஆண்டுகளாக வனப்பகுதியில் விவசாயம் செய்து வரும் பழங்குடியினருக்கு பட்டா வழங்க இதுவரை எந்த தேசியக் கட்சியும் முன்வரவில்லை என


பல ஆண்டுகளாக வனப்பகுதியில் விவசாயம் செய்து வரும் பழங்குடியினருக்கு பட்டா வழங்க இதுவரை எந்த தேசியக் கட்சியும் முன்வரவில்லை என ஆதிவாசிகள் அமைப்பின் மாநில அமைப்பாளர் ரங்கநாதன் பேசினார்.
சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில் வளாகத்தில் தமிழ்நாடு பழங்குடியினர் (எஸ்.டி.) மக்கள் நல முன்னேற்ற சங்கத்தின் சார்பில் புதிய வனக்கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டம், மாநில தலைவர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக ஆதிவாசிகள் பிரசார அமைப்பின் மாநில அமைப்பாளர் ரங்கநாதன் பேசியது:
வனப்பகுதியில் சொந்த நிலம் இல்லாத பழங்குடியினர் விவசாயம் செய்து வாழ்வாதாரத்துடன் இருந்து வந்தவர்களுக்கு, பட்டா வழங்கக் கோரி கடந்த 2006- ஆம் ஆண்டு புதுதில்லியில் ஆதிவாசிகள் போராட்டம் நடத்தினர்.
அதன் பின் வன உரிமைச்சட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. அதனால் பழங்குடியினரின் நிலங்களை யாரும் வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை உள்ளது. அந்நிலத்தை, அவர்களின் வாரிசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம். பல ஆண்டுகளாக வனப்பகுதியில் விவசாயம் செய்து வரும் பழங்குடியினருக்கு பட்டா வழங்க, இதுவரை எந்த தேசியக்கட்சியும் முன்வரவில்லை.
வன உரிமைச் சட்டத்தில் இந்தியாவில் 5,000 கிராமங்கள் செட்டில்மெண்ட் செய்த கிராமங்களாக அறிவிக்கப்பட்டன. அவற்றை வருவாய்க் கிராமங்களாக மாற்றாததால், அரசின் சலுகைகள் பெறமுடியாத நிலை உள்ளது என்றார்.
கூட்டத்தில் ஊராட்சி அமைப்புகளில் ஆதிவாசி மக்கள் தொகைக்கு ஏற்ப இடஓதுக்கீடு அளிக்க வேண்டும். ஆதிவாசி மக்கள் வாழும் பகுதிகளில் செயல்படும் அரசு பள்ளிகள் அனைத்திலும், தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்ய கல்வி அமைப்புகளின் நிர்வாகத்தில் ஆதிவாசி மக்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டும்.
ஜவ்வாது மலையில் வன நிலங்களில் பயிர் செய்யும் ஆதிவாசி மக்களை மிரட்டி வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com