அரசுப் பள்ளி மாணவியருக்கு "காவலன் செயலி' விழிப்புணர்வு

மோகனூர் காவல் நிலையம் சார்பில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் "காவலன் செயலி' குறித்த விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மோகனூர் காவல் நிலையம் சார்பில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் "காவலன் செயலி' குறித்த விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காவல் ஆய்வாளர் சுகுமார் தலைமை வகித்தார். எஸ்.ஐ. கதிரவன் காவலன் செயலி சேவையை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தார்.
மேலும், எதிர்பாராத விதமாக ஏதாவது அசம்பாவிதமோ, விபத்தோ, அச்சுறுத்தலோ ஏற்பட்டால் சம்பவ இடத்தில் இருந்தே, இந்த செயலி மூலம் தகவல் தெரிவித்தால் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 
தொடர்ந்து, அதில் உள்ள செல்லிடப்பேசி எண்களை குறித்து வைத்துக்கொண்டு பயன் பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. உதவித் தலைமையாசிரியர் ராஜேந்திரன், ஆசிரியர்கள், மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com