மாணவர்கள் செல்லிடப்பேசியைத் தவிர்த்து நூலகத்தைப் பயன்படுத்த வேண்டும்

மாணவர்கள் செல்லிடப்பேசியைத் தவிர்த்து நூலகத்தைப் பயன்படுத்த வேண்டும் என மனிதவள

மாணவர்கள் செல்லிடப்பேசியைத் தவிர்த்து நூலகத்தைப் பயன்படுத்த வேண்டும் என மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் மற்றும் பேச்சாளர் கதிர் தெரிவித்தார்.
நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் மன்ற விழா, ஆசிரியர் தின விழா, கலைத்திருவிழா, உலக அறிவியல் தின விழா, முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழா ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது. 
விழாவைக் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர்  ஜெயம்செல்வராஜ் குத்துவிளக்கேற்றி  தொடக்கி வைத்தார். கல்லூரி தாளாளர் பி. செல்வராஜ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ந. ராஜவேல் வரவேற்றார். துணைத் தாளாளர் மருத்துவர் செ. பாபு,  செயலர் கவீத்ரா நந்தினிபாபு, நிர்வாக இயக்குநர் கே.எஸ். அருள்சாமி முன்னிலை வகித்தனர்.
பட்டிமன்றப் பேச்சாளர் நாகசரஸ்வதி பங்கேற்று "வாழ்க்கை கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம்' எனும் தலைப்பில் பேசினார். அவர் பேசுகையில், ஒவ்வொருவரும் சிந்தித்து தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் பயணித்தால் வானமளவு லட்சியங்களையும் வென்றிடலாம்.
மகாத்மா காந்தி, விவேகானந்தர், ஆப்ரகாம் லிங்கன்,  அப்துல் காலம் போன்றோர் சோதனைகளை சாதனைகளாக்கியவர்கள். இன்றைய நவீன உலகில் கணினி, செல்லிடப்பேசி போன்ற சாதனங்களின் நல்லனவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு  தீயனவற்றை கைவிட்டு வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்றார்.
பிற்பகல் கலைத் திருவிழா நடைபெற்றது. இதில் மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வாக வியாழக்கிழமை உலக அறிவியல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்,  பேச்சாளர் கதிர் பங்கேற்று பசித்திரு எனும் தலைப்பில், அறிவியல் என்பது மனிதனுடைய வளர்நிலை, ஒவ்வொருவரும் ஏன், எதற்கு, எப்படியென கேள்வி எழுப்பும்போது தான் பல சிந்தனைகள்தோன்றி அறிவியல் பிறக்கின்றது.
அரிஸ்டாடில், கலிலியோ போன்ற மேதைகள் பல்வேறு சோதனைகளுக்குப் பின்பே வெற்றிக் கண்டனர். மாணவர்கள் செல்லிடப்பேசியை தவிர்த்து நூலகத்தைப் பயன்படுத்த வேண்டும். பெற்றோர்களின் தியாகத்தையும், ஆசிரியர்களின் உணர்வுகளையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  விழாவைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக மாணவர்களுக்கு பலகலை நிகழ்ச்சிகளை நடத்தியும் அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. துணை முதல்வர் ப. தாமரைச்செல்வன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com