எஸ்.எஸ்.எம். கல்வி நிறுவனத்தில் ஐம்பெரும் விழா

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கல்வி நிறுவனங்களில் நிறுவனர் தினம், உருவச்சிலை திறப்பு, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா,

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கல்வி நிறுவனங்களில் நிறுவனர் தினம், உருவச்சிலை திறப்பு, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, பொறியியல் கல்லூரியின் 20-ஆம் ஆண்டு தொடக்க விழா, ஆசிரியர் தின விழா என ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
 விழாவுக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார். எஸ்எஸ்எம் கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.எஸ். மதிவாணன் வரவேற்றார்.
 தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி, தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் ஆகியோர் பேசினர்.
 இக்கல்வி நிறுவனங்களின் நிறுவனரான எஸ்எஸ்எம். சுப்பிரமணியம், முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருடன் கொண்ட நட்பு குறித்தும், அதிமுகவின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு குமாரபாளையம் எவ்வாறு உதவியது என்பது குறித்தும் விழாவில் நினைவு கூறப்பட்டது.
 ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வகுமார சின்னையன், குறள்மலை சங்கத்தின் தலைவர் பா.ரவிக்குமார், குமாரபாளையம் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.கே.நாகராஜன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஜேசிடி.பிரபாகரன், தொழிலதிபர் எம்.எஸ்.குமணன், கல்லூரி முதல்வர் எஸ்.பாலமோகன், இயக்குநர் கே.ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com