நாமக்கல் தொகுதியில் 4 சுயேச்சைகள் மனுத் தாக்கல்

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க.- கொ.ம.தே.க.  வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள்  உள்பட எட்டு பேர் வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தனர்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க.- கொ.ம.தே.க.  வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள்  உள்பட எட்டு பேர் வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தனர்.
தமிழகம், புதுச்சேரியில், இரண்டாம் கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நாமக்கல் தொகுதிக்கான மனு தாக்கல், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. முதல் நாளில், தி.ரமேஷ் என்ற இளைஞர் மட்டும் மனு அளித்தார். அடுத்த இரு நாள்களுக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 
இதையடுத்து வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த தினம் என்பதால், நாமக்கல் அ.தி.மு.க. வேட்பாளர் பி.காளியப்பன், மாற்று வேட்பாளராக அவரது மகன் பி.கே.ராஜா, கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ், மாற்று வேட்பாளராக மாதேஸ்வரன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். 
மேலும், பரமத்திவேலூர் வட்டம், மேட்டுப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த நல்லான் மகன் ராமசாமி (51) என்பவர் சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்தார். சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக கண்காணிப்பாளர் பி.நல்லதம்பி (66), நாமக்கல் நேதாஜி மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் மு.நடராஜன்(53), நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள  எம்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த எம்.பி.முத்துசாமி(63) உள்ளிட்ட 4 பேர் சுயேச்சைகளாக மனுத் தாக்கல் செய்தனர். 
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பி.பாஸ்கரன், விஸ்வகர்மா இளைஞர் பேரவையைச் சேர்ந்த சக்திவேல் ஆகியோரின் மனுக்கள் சரியாக பூர்த்தி செய்யப்படாமல் இருந்ததால் வெள்ளிக்கிழமை அவர்கள் மனுத் தாக்கல் செய்யவில்லை. 
நாமக்கல் தொகுதியில் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 9 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். வரும் 25, 26-ஆம் தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே மனுத் தாக்கல் செய்யமுடியும். 27-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை,  28,  29 - ஆம் தேதிகளில் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். 29 - ஆம் தேதி மாலை 3 மணிக்கு மேல், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com