ஈக்களைக் கட்டுப்படுத்த பண்ணை தூய்மை அவசியம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிப் பண்ணைகளில் ஈக்களைக் கட்டுப்படுத்த பண்ணை தூய்மை அவசியம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோழிப் பண்ணைகளில் ஈக்களைக் கட்டுப்படுத்த பண்ணை தூய்மை அவசியம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  வரும் மூன்று நாள்களும் வானம் பொதுவான மேகமுட்டத்துடன் காணப்படும்.  மழை 25 மில்லி மீட்டர் அளவில் பெய்யக் கூடும். காற்று மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில்,  தெற்கில் இருந்து வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 93.2 டிகிரியும்,  குறைந்தபட்சமாக 73.4 டிகிரியும் இருக்கக் கூடும். 
சிறப்பு வானிலை ஆலோசனை:  தென்மேற்கு பருவ மழைக் காலம் தொடர்வதாலும்,  மேலடுக்கு சுழற்சி நகராமல் இருப்பதாலும், பெரும்பாலான இடங்களில் பரவலான மழை எதிர்பார்க்கப்படுகிறது.  காற்றின் வேகம் இயல்பான அளவுகளில் வீசினாலும்,  மாலை நேரங்களில் அதிக வேகத்தில் வீசக் கூடும். மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால்,  பண்ணையைச் சுற்றி புற்களும்,  கோழி மனைகளுக்கு கீழே நீர் தேங்கி,  எருவின் ஈரப்பதம் அதிகரித்தும் காணப்படுவதால்,  அம்மோனியா மற்றும் ஈக்கள் உற்பத்திக்கு அது வழிவகுக்கும்.  முன்னெச்சரிக்கையாக,  எருவின் தன்மை நீராக மாறாமல் இருக்க ஜிப்சம் எனப்படும் உப்பை ஈரமான எருவிற்கு மேல் தாராளமாக தூவி வரவேண்டும்.  மேலும், புற்களை நீக்கி சுத்தமாக பண்ணையை வைத்திருப்பதாலும், ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.  கோழிகளுக்கு தீவன எடுப்பு அதிகளவில் காணப்படும் என்பதால்,  முட்டை எடை கூடி, ஓட்டின் தரம் குறையும்.  முட்டை எடை அதிகமாகக் காணப்பட்டால்,  தீவனத்தில் எரிசக்தியின் அளவைக் கூட்ட வேண்டும்.  புரதத்தின் அளவை சரியான அளவில் வைத்து தீவன எடுப்பைக் கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com