"டெக்பினிக்ஸ்-19' தொழில்நுட்பக் கருத்தரங்கு

ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் "டெக்பினிக்ஸ் 19" என்ற தேசிய அளவிலான இரண்டு நாள் தொழில்நுட்பக் கருத்தரங்கு செப். 20, 21 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.

ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் "டெக்பினிக்ஸ் 19" என்ற தேசிய அளவிலான இரண்டு நாள் தொழில்நுட்பக் கருத்தரங்கு செப். 20, 21 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.
தொடக்க விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கோயம்புத்தூர் கே.ஜி. குழும நிறுவனங்களின் தலைவர் பி.பக்தவத்சலம், கெளரவ விருந்தினராக பெங்களூரு ஐஐஜிஎம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் பி.கங்காதர ராவ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர்  மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். இரண்டாமாண்டு கட்டடப் பொறியியல் துறை மாணவி எஸ்.யு.சுஷ்மா வரவேற்றார்.
கருத்தரங்கில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் புதிய பரிணாமம் என்பது அவைகள் நமது வளர்ச்சிக்காகவும், அன்றாட வாழ்வோடு பொருந்த கூடியதாகவும் உருவாக்குவதே ஆகும். நீங்கள் கற்கும் கல்வியை முழு ஈடுபாட்டுடனும், தேடல் உணர்வோடும் கற்க வேண்டும். அவ்வாறு செயல்படும் போது கல்வி மட்டுமல்லாமல் வாழ்விலும் நீங்கள் வெற்றியாளர்களாக திகழ முடியும் என்றார். தொடர்ந்து கருத்தரங்கு மலர் வெளியிடப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு நிறைவு விழாவில், கோயம்புத்தூர் கீக்ஸ்டாக் நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மை செயல் அலுவலருமான வினித் பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், வாய்ப்பு கிடைக்கும் போது சூழ்நிலைகளை பொருட்டாக கருதாமல் தயக்கங்களை தவிர்த்து உறுதியுடன் செயல்படுங்கள். கனவுகளை, லட்சியங்களாக மாற்றி விடாமுயற்சியுடன் செயல்படும் போது உலகம் உங்கள் வசப்படும் என்றார்.
கருத்தரங்கில் மாணவ, மாணவியர் சமர்பித்த 600 ஆய்வுக் கட்டுரைகளில், சிறந்ததாக 151 ஆய்வுக் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மேலும் 45-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் (நிர்வாகம் ) கே.கே.ராமசாமி, கே.செந்தில் (சேர்க்கை), சி.சதீஸ் (பள்ளிகள்), பொறியியல் கல்லூரி முதல்வர் எம்.பிரேம்குமார் உள்ளிட்ட துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com