எருமப்பட்டியில் கொ.ம.தே.க. வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் திங்கள்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் திங்கள்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கொமதேகவைச் சேர்ந்த ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறார். அவர் திங்கள்கிழமை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் தலைமையில் கொல்லிமலை, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கூலிப்பட்டி, காந்தபுரி, ரெட்டிப்பட்டி, பொம்மசமுத்திரம், பெருமாப்பட்டி, பழையபாளையம், போடிநாயக்கன்பட்டி, அலாங்கநந்தம், பொட்டிரெட்டிப்பட்டி, எருமப்பட்டி, தேவராயபுரம், வரகூர், பவித்திரம், முட்டாஞ்செட்டி, புதுகோட்டை, காவக்காரன்பட்டி, திப்ரமாதேவி, தூசூர், பழப்பட்டி, கொடிக்கால்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். 
தேர்தலில் வெற்றிபெற்றவுடன் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி கல்விக் கடன், விவசாயக் கடன் ரத்து செய்யப்படும். எருமப்பட்டி பகுதிக்கு தனி குடிநீர் திட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பிரசாரத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவர் ஷேக்நவீத், கொமதேக மாநில இளைஞரணி செயலர் சூர்யமூர்த்தி, ஒன்றியச் செயலர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com