மறுகரைக்கு செல்லும் தண்ணீரைப் பிரித்து பொத்தனூர் காவிரி கரைக்கு அனுப்பக் கோரிக்கை

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காவிரியில் இருந்து தண்ணீரைப்


பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காவிரியில் இருந்து தண்ணீரைப் பிரித்து அனுப்ப வேண்டும் என அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பொதுப் பணித் துறையினர் மற்றும் பொத்தனூர் பேரூராட்சியினரிடம் கோரிக்கை மனு
அளித்துள்ளனர்.
பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில் புகழூர் காகித ஆலை நிர்வாகத்தினர் பொத்தனூர் பகுதிக்கு வரும் தண்ணீரை திருப்பி காவிரி ஆற்றில் ஆழமான குழிகள் தோண்டி தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதனால் பொத்தனூர் காவிரி கரைக்கு தண்ணீர் வராததால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு தண்ணீர் எடுக்க செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்க ஆற்றில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பொத்தனூர் காவிரி ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் குளித்த போது அந்தக் குழியில் சிக்கி
உயிரிழந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் தண்ணீரை பொத்தனூர் காவிரி கரைக்கு திருப்பி விடவேண்டும் என பொத்தனூரைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பொத்தனூர் பேரூராட்சி அலுவலகம் மற்றும் பரமத்தி வேலூர் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். மேலும் நாமக்கல் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கப் போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com