கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: அரசுத் துறையினருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

கொல்லிமலை வல்வில் ஓரி விழா நிறைவடைந்ததையொட்டி,  சிறப்பாக பணியாற்றிய அரசுத் துறையினர்,  கலை நிகழ்ச்சி குழுவினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கொல்லிமலை வல்வில் ஓரி விழா நிறைவடைந்ததையொட்டி,  சிறப்பாக பணியாற்றிய அரசுத் துறையினர்,  கலை நிகழ்ச்சி குழுவினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் வல்வில் ஓரி விழா- சுற்றுலா விழா மற்றும் மலர்க் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.   விழாவில், தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சியை ஆட்சியர் மு.ஆசியா மரியம், சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர்  சி.சந்திரசேகரன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். அதன்பின் வல்வில் ஓரி அரங்கில் நடைபெற்ற விழாவில், 939 பயனாளிகளுக்கு ரூ.2.84 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர், அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கலைப் பண்பாட்டுத் துறையினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்ட ரசித்தனர்.
இதையடுத்து சனிக்கிழமை ஆடிப்பெருக்கு நாள் என்பதால், கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். செம்மேடு அரசு உண்டி உறைவிடப் பள்ளியில் வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற வீரர்களுக்கும்,  கலைநிகழ்ச்சிகள் நடத்திய கலைக் குழுவினர் மற்றும் மாணவ, மாணவியர், சிறந்த அரங்குகள் அமைத்த அரசுத் துறையினருக்கும் சான்றிதழ்கள் வழங்கும் விழா,  வல்வில் ஓரி அரங்கில்  பிற்பகலில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் சி.சந்திரசேகரன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினர்.
மேலும், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கும், பல்துறைப் பணிகளை பொதுமக்களுக்கு  தெரிவிப்பதற்கான  கண்காட்சியில் சிறந்த முறையில் அரங்குகள் அமைத்த அரசுத் துறையினருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் ஆர்.காஞ்சனா,  சார் ஆட்சியர் சு.கிராந்திகுமார் பதி, சுற்றுலாத்துறை அலுவலர் த.ஜெகதீஸ்வரி, மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்தநாராயணன், கொல்லிமலை வட்டாட்சியர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.மாதேஸ்வரன், கே.அருளப்பன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com