நூலகர் தினம் கொண்டாட்டம்

நாமக்கல் மைய நூலகத்தில், புதன்கிழமை நூலகர் தினம் கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மைய நூலகத்தில், புதன்கிழமை நூலகர் தினம் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தின் நூலகத் தந்தை என்றழைக்கப்படும் மருத்துவர் சீயாழி இராமாமிர்த அரங்கநாதன் பிறந்த தினமான ஆகஸ்ட் 12-ஆம் தேதி நூலகர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டில் அரசு விடுமுறையன்று அந்த தினம் வந்ததால்,  பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரு நாள்களாக நூலகர் தின விழா நடைபெற்றது.  நாமக்கல் உழவர் சந்தை அருகில் உள்ள,  மாவட்ட மைய நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில்,  மாவட்ட நூலக அலுவலர் கோ.ரவி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர்(பொறுப்பு) மு.ஆ.உதயகுமார் தலைமை வகித்தார். 
மாவட்ட மைய நூலகத்தின் வாசகர் வட்ட பொருளாளர் கே.ஆர்.ராஜவேல், மருத்துவர் சீயாழி இராமாமிர்த அரங்கநாதன் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை செயலாளர் செல்வ.செந்தில்குமார்,  வாசகர் வட்ட தலைவர் க.ஜோதிலிங்கம், முதல் நிலை நூலகர் இரா.வேல்முருகன் மற்றும் நூலக அலுவலர்கள், வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com