ராசிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா

ராசிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளில் வியாழக்கிழமை சுதந்திர தின விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

ராசிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளில் வியாழக்கிழமை சுதந்திர தின விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
 ராசிபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஆணையாளர் மா.கணேசன் தேசியக் கொடியேற்றி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி பேசினார். நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கோலாட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 ராசிபுரம் நகர காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற விழாவில் நகர காங்கிரஸ் தலைவர் ஆர்.முரளி தலைமை வகித்தார். தியாகி பச்சமுத்து உடையார் தேசியக் கொடியேற்றி வைத்தார். மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் பாச்சல் ஏ.சீனிவாசன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர்.வினாயகமூர்த்தி, காந்தி மாளிகை டிரஸ்ட் போர்டு நிர்வாகிகள் எஸ்.சிங்காரம், என்.சண்முகம், எஸ்.கே.பி.எம்.வடிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்று இனிப்புகளும், மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப்புத்தகங்களும் வழங்கினர்.
 ஆர்.புதுப்பாளையம் காங்கிரஸ் பிற்பட்டோர் பிரிவு சார்பில் நடைபெற்ற விழாவில் மாவட்ட பிற்பட்டோர் பிரிவு தலைவர் பி.பழனிசாமி தலைமை வகித்தார். மாநில பிற்பட்டோர் பிரிவு செயலர் என்.ராசேந்திரன் தேசியக்கொடியேற்றினார்.
 கல்வி நிறுவனங்கள்
 ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி நடைபெற்ற விழாவில் மாணவர்கள் தேசத் தலைவர்கள் வேடமணிந்தவாறு கும்மியடித்து கொடியேற்றி கொண்டாடினர். புதுப்பட்டி நடுநிலைப் பள்ளி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கிராமத்தின் எல்லையில் இருந்து மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, வ.உ.சி., பாரதியார், திருப்பூர் குமரன் போன்ற பல்வேறு தேசத் தலைவர்கள் வேடமணிந்து ஊர்வலமாக வந்தனர். பள்ளி தலைமையாசிரியர் விழாவுக்கு மகேஸ்வரி தலைமை வகித்தார்.
 ராசிபுரம் பாவை வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி துணை முதல்வர் ரோஹித் வரவேற்றார். பள்ளிகளின் தலைவர் என்.வி.நடராஜன் தேசியக்கொடியேற்றினார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன், பள்ளி இயக்குநர் சி.சதீஸ், இணைச் செயலர் என்.பழனிவேல், இயக்குநர் கே.செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கொடியேற்று விழாவில், முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் இணைச்செயலர் ஜி.ராகுல் தேசியக்கொடியேற்றி பேசினார். கல்லூரித் தலைவர் ஆர்.கந்தசாமி, செயலர் கே.குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது. கல்லூரி முதல்வர் எம்.மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ராதாசந்திரசேகர், பொருளாளர் பூபதி, கல்விக் குழுத் தலைவர் ரவிமன்னன், உதவி தலைமையாசிரியர் கே.விஜயகுமாரி, கணித ஆசிரியர் சௌந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சென்னை நிதி நிர்வாக ஆலோசகர் எம்.என்.ராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சுதந்திர தினம் குறித்துப் பேசினார். மாணவ, மாணகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி நிர்வாகிகள் என்.மாணிக்கம், எம்.ராமகிருஷ்ணன், வி.ராமசாமி, வி.சுந்தரராஜன், வி.பாலகிருஷ்ணன், முதல்வர்கள் பி.கிருஷ்ணமூர்த்தி, எம்.மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சார்பில் சுதந்திர தின விழா, பாரதமாதா பூஜை, ரக்ஷôபந்தன் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பள்ளித் தலைவர் கே.குமாரசாமி தேசியக் கொடியேற்றினார். செயலர் எஸ்.சந்திரசேகரன் வரவேற்றார்.
 ராசிபுரம் அருகே வையப்பமலை ஸ்ரீவிநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நடைபெற்ற சுதந்திர கொடியேற்று விழாவில் பள்ளிச் செயலர் கே.பத்மாவதி தலைமை வகித்தார். பள்ளித் தலைவர் கே.எம்.கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். முதல்வர் கே.என்.சின்னுசாமி முன்னிலை வகித்தார்.
 மசக்காளிப்பட்டி மகரிஷி வித்யாமந்திர் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைவர் க.சிதம்பரம் தலைமை வகித்து தேசியக்கொடியேற்றினார். புலவர் ராமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சுதந்திர போராட்டம் குறித்துப் பேசினார். முதல்வர் எஸ்.ஸ்தனிஸ்லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 ஆண்டகளூர்கேட் அருள்மிகு ஸ்ரீவெங்கடேஸ்வர் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஆ.கோபால்கிருஷ்ணன், புலவர் பூங்குன்றனார் ஆகியோர் பங்கேற்று, தேச விடுதலைப் போராட்டம் குறித்துப் பேசினர்.
 சின்னகாக்காவேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், தலைமையாசிரியர் ராணி தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் பூபதி தேசியக்கொடியேற்றினார். சமூக ஆர்வலர் சரவணன் நோட்டுப்புத்தகங்களை வழங்கினார்.
 ராசிபுரம் வித்யாநிகேதன் பள்ளிகள் சார்பில் நடைபெற்ற 73-ஆவது சுதந்திர தினவிழா, விளையாட்டு விழாவில் பள்ளி முதல்வர் பி.ஸ்ரீபிரவீனா வரவேற்றார். நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தேசியக்கொடியேற்றினார். பள்ளித் தலைவர் சி.சுந்தரராஜூ, செயலர் ஆர்.பாலசுப்பிரமணியம், பொருளாளர் ஆர்.கணேசன், இயக்குநர்கள் பி.நடராஜன், எஸ்.பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 ராசிபுரம் ஸ்ரீவித்யா பாரதி மாடர்ன் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைவர் எஸ்.பாலாஜி தலைமை வகித்தார். செயலர் எஸ்.கதிரேசன், பொருளாளர் ஆர்.அண்ணாமலை, இயக்குனர் எம்.மெய்யப்பன், தாளாளர் எஸ்.லாவண்யா, பள்ளி முதல்வர் டி.சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட முன்னாள் ஆளுநர் ஆர்.கோவிந்தராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை எற்று, தேசியக்கொடியேற்றினார்.
 ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளிகள் சார்பில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைவர் ஜி.வெற்றிச்செல்வன் தலைமை வகித்தார். பள்ளிகளின் நிறுவனர் எஸ்.குணசேகரன் பங்கேற்று, தேசியக்கொடியேற்றி வைத்து, இனிப்புகள் வழங்கி விளையாட்டுப் போட்டிகளை தொடக்கிவைத்துப் பேசினார். பின்னர் ஒட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோ-கோ, கராத்தே சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளிச் செயலர் பாலசுப்பிரமணியன், வேதியியல் துறை இயக்குநர் என்.மாரிமுத்து, ஆங்கிலத் துறை இயக்குநர் தாசபிரகாசம், பள்ளி முதல்வர் லட்சுமி மோகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
 ஸ்ரீவித்யாலயம் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைவர் எஸ்.திருவின்மணாளன் தேசியக்கொடியேற்றிவைத்து பேசினார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சுதந்திர போராட்ட வரலாறு குறித்து பேசினார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com