24-இல் நீர் மேலாண்மை குறித்த கிராம சபைக் கூட்டம் 

நாமக்கல் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (ஆக.24) நீர் மேலாண்மை குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (ஆக.24) நீர் மேலாண்மை குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
 இது குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வரும் சனிக்கிழமை நீர் மேலாண்மை இயக்கம் குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், நீர் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேரிப்பை முதன்மைக் குறிக்கோளாக கொண்டு, நீர்ப் பற்றாக்குறையுள்ள பகுதிகளில், ஜல் சக்தி அபியான் என்ற இயக்கத்தை இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டம் செப்டம்பர் 15 வரையிலும், இரண்டாம் கட்டம் வடகிழக்கு பருவமழைக் காலமான அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரையிலும் செயல்படுத்தப்பட உள்ளது. ஜல் சக்தி அபியான் இயக்கத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ள 5 செயல்பாடுகளில் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு, ஏரிகளை புதுப்பித்தல், மீள் நிரப்பு கட்டமைப்புகளை மறு பயன்பாடு செய்தல், நீர் வடிப்பகுதி மேம்பாடு செய்தல், தீவிர காடு வளர்ப்பு, ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கி வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்குவது உள்ளிட்டவை நடைபெறவுள்ளது. கிராம சபைக் கூட்டத்தில் இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான விளக்கங்கள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com