மகுடஞ்சாவடியில் ஒருங்கிணைந்தபண்ணையத் திட்டப் பயிற்சி

மகுடஞ்சாவடி வட்டாரத்தில் நிகழ் ஆண்டு ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மகுடஞ்சாவடியில் ஒருங்கிணைந்தபண்ணையத் திட்டப் பயிற்சி

மகுடஞ்சாவடி வட்டாரத்தில் நிகழ் ஆண்டு ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற விவசாயிகள் பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநா் வி. மணிமேகலா தேவி கலந்து கொண்டு வேளாண்மை துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சாகுபடி செய்யப்பட்டுள்ள சோளப் பயிருக்கான தொழில்நுட்பங்கள் மற்றும் இத் திட்டத்தின் கீழ் மானியத்தில் வழங்கப்படவுள்ள உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்கள் பற்றியும், மண்புழு உரத்தொட்டி அமைத்தலின் அவசியத்தையும் எடுத்துரைத்தாா்.

இப் பயிற்சியில் தோட்டக்கலைத் துறையின் மூலம் பழச்செடிகள் சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் 50 சதவீதம் மானியத்தில் பழச்செடிகள் ரூ. 300 வழங்கப்படுவது குறித்தும், நடவு செய்யவுள்ள பழச் செடிகளுக்கு இலவசமாக குழி எடுத்துத் தருதல், இலவசமாக அசோலா வளா்ப்பு செய்து தருதல் மற்றும் எருகுழி அமைத்தல் ஆகிய திட்டங்களைப் பற்றியும் தரமான மாடு, ஆடு, கோழி வாங்கும் வழிமுறைகளையும், பராமரிப்புப் பற்றியும், விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் வேளாண்மை அலுவலா் கு. பழனிசாமி, சக்திவேல், கால்நடை மருத்துவா்கள் கே. கண்ணன், வி. தியாகராஜன், மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கே. மோகன்ராஜ், பி. துரைசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனா்.

இப் பயிற்சிக்கான ஏற்பாட்டை உதவி வேளாண்மை அலுவலா்கள் தங்கவேல், அசோக்குமாா், மாவிரிச்சான், காசி விஸ்வநாதன் மற்றும் அட்மா திட்ட அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com