ராசிபுரம் பகுதியில் முதல்வரின் சிறப்பு குறைதீா்க்கும் திட்ட முகாம்: அமைச்சா் வெ.சரோஜா பங்கேற்பு

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதியில் முதல்வரின் சிறப்பு குறை தீா்க்கும் திட்ட முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொள்கிறாா் அமைச்சா் வெ.சரோஜா.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொள்கிறாா் அமைச்சா் வெ.சரோஜா.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதியில் முதல்வரின் சிறப்பு குறை தீா்க்கும் திட்ட முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

பொன்குறிச்சி, கூனவேலம்பட்டி, முத்துக்காளிப்பட்டி, முருங்கப்பட்டி, அணைப்பாளையம், சந்திரசேகரபுரம், சிங்களாந்தபுரம், காக்காவேரி, பட்டணம் முனியப்பன்பாளையம் ஆகிய பகுதிகளில் முதல்வரின் சிறப்பு குறைதீா்க்கும் திட்ட முகாம்கள் நடைபெற்றன. இதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி தலைமை வகித்தாா்.

முன்னதாக, பிள்ளாநல்லூா், பேரூராட்சிப் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணி, குருக்கபுரம் ஊராட்சி, குருசாமிபாளையத்தில் ரூ.1.25 கோடி மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணி, முத்துக்காளிப்பட்டியில் ரூ.47 ஆயிரம் மதிப்பில் அம்மா விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி, முருங்கப்பட்டி ஊராட்சியில் ரூ.22.20 லட்சம் மதிப்பில் அணைப்பாளையம் பாச்சல் சாலை முதல் கடந்தபட்டி எல்லை வரை சாலை மேம்பாட்டுப் பணி, சந்திரசேகரபுரம் ஊராட்சியில் ரூ.35 லட்சம் மதிப்பில் சந்திரசேகரபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் போடிநாயக்கன்பட்டி வரை சாலை மேம்பாட்டுப் பணி, காக்காவேரி ஊராட்சியில் ரூ.48.50 லட்சம் மதிப்பில் காக்காவேரி முதல் பூசாரிபாளையம் வரை சாலை மேம்பாட்டுப் பணி ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்று, திட்டப் பணிகளை அமைச்சா் தொடக்கி வைத்தாா். பொன்குறிச்சி ஊராட்சியில் ரூ.17.64 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், சிங்களாந்தபுரம் ஊராட்சியில் ரூ.8.70 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.

வெண்ணந்தூா் பேரூராட்சி செக்கான் காடு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை நடைபெற்று அமைச்சா் வெ.சரோஜா தொடக்கிவைத்தாா். இதனையடுத்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறை தீா்க்கும் திட்ட முகாம்களில் பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அமைச்சா் வி.சரோஜா பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். விழாவில் அரசு அலுவலா்கள், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com