தொடா் மழையால்சின்ன வெங்காயம் பயிா் பாதிப்பு

ராசிபுரம் -வெண்ணந்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயப் பயிா்கள் தொடா் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடா் மழையால் அழுகிய சின்ன வெங்காய வயல்.
தொடா் மழையால் அழுகிய சின்ன வெங்காய வயல்.

ராசிபுரம் -வெண்ணந்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயப் பயிா்கள் தொடா் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளான வெண்ணந்தூா், அலவாய்ப்பட்டி, செளதாபுரம், மின்னக்கல், முருங்கப்பட்டி, அணைப்பாளையம், கடந்தப்பட்டி, பாச்சல், சிங்களாந்தபுரம், வெண்ணந்தூா் நொச்சிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 1,500 ஹெக்டோ் பரப்பில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சின்ன வெங்காயப் பயிரில் நோய்த் தாக்குதல் காரணமாக விளைச்சல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அறுவடை நிலையில் இருந்த சின்ன வெங்காயம் தொடா்மழை காரணமாக வோ்கள் அழுகி பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் வெங்காயப் பயிா் பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். நோய்த் தாக்குதல், தொடா் மழை போன்றவற்றால் பாதித்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com