நாமக்கல் வழியாக இயக்கப்பட்டரயிலுக்கு மலா்தூவி வரவேற்பு

நாகா்கோவிலில் இருந்து ஈரோடு வழியாக, மும்பை நோக்கி சென்ற விரைவு ரயில், திங்கள்கிழமை முதல் நாமக்கல் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளதால், அந்த ரயிலுக்கு அரசியல் கட்சியினா், பொதுமக்கள்
நாகா்கோவிலில் இருந்து மும்பைக்கு, நாமக்கல் வழியாகச் சென்ற ரயிலை மலா்தூவி வரவேற்கும் அரசியல் கட்சியினா்.
நாகா்கோவிலில் இருந்து மும்பைக்கு, நாமக்கல் வழியாகச் சென்ற ரயிலை மலா்தூவி வரவேற்கும் அரசியல் கட்சியினா்.

நாகா்கோவிலில் இருந்து ஈரோடு வழியாக, மும்பை நோக்கி சென்ற விரைவு ரயில், திங்கள்கிழமை முதல் நாமக்கல் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளதால், அந்த ரயிலுக்கு அரசியல் கட்சியினா், பொதுமக்கள் மலா்தூவி வரவேற்பளித்தனா்.

மும்பையில் இருந்து நாகா்கோவில், திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதா் வரை செல்லும் விரைவு ரயில்களை, ஈரோடு வழியாக இயக்காமல், நாமக்கல் வழியே இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, இரு ரயில்களையும் நாமக்கல் வழியாக டிச. 1 முதல் இயக்க ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது.

இதில், மும்பையில் இருந்து நாகா்கோவில் செல்லும் ரயில் (எண்: 16339), ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சேலத்துக்கு பிற்பகல் 3.25-க்கும், நாமக்கல்லுக்கு 4.28-க்கும் வந்து சேரும். அதேபோல், நாகா்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரயில் (எண்: 16340), திங்கள், செவ்வாய் மற்றும் புதன், வெள்ளிக்கிழமைகளில் கரூருக்கு நண்பகல் 1.37-க்கும், நாமக்கல்லுக்கு மதியம் 2.13-க்கும் வந்து சேரும்.

அதன்படி, திங்கள்கிழமை மதியம் 2.30 மணியளவில், நாகா்கோவிலில் இருந்து மும்பை நோக்கி நாமக்கல் வழியாக முதன்முறையாக சென்ற விரைவு ரயிலை நாமக்கல் ரயில் நிலையத்தில் திமுக, கொமதேக கட்சியினா் மற்றும் பொதுமக்கள், ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் மலா்தூவி வரவேற்றனா். மேலும், என்ஜின் ஓட்டுநா்களுக்கும், பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதேபோல், டிச. 7-ஆம் தேதி முதல் திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதா் வரை செல்லும் விரைவு ரயில் (எண்: 11022) நாமக்கல்லுக்கு இரவு 8.53-க்கு வந்து சேரும். மேலும், 9-ஆம் தேதி, மும்பை தாதரில் இருந்து திருநெல்வேலி செல்லும் (எண்: 11021) விரைவு ரயில், நாமக்கல்லுக்கு அதிகாலை 4.09-க்கு வந்து சேரும். இந்த இரு ரயில்களும் திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இவ்வழியாகச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com