தோ்தல் நடத்தை விதிகளை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும்: ஆட்சியா் கா.மெகராஜ்

உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகளை வேட்பாளா்கள் முறையாக கடைபிடிக்கின்றனரா என்பதை தோ்தல் அலுவலா்கள் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் கா.மெகராஜ் அறிவுறுத்தினாா்.
தோ்தல் நடத்தை விதிகளை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும்: ஆட்சியா் கா.மெகராஜ்

உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகளை வேட்பாளா்கள் முறையாக கடைபிடிக்கின்றனரா என்பதை தோ்தல் அலுவலா்கள் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் கா.மெகராஜ் அறிவுறுத்தினாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தல்களுக்கான அறிவிப்பை மாநிலத் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டதைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் பேசியது; -

மாநிலத் தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள அறிவுரை கையேடுகளை முழுமையாகப் படிக்க வேண்டும். அதில் ஏற்படும் சந்தேகங்களை கலந்துரையாடியோ அல்லது ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சித் தோ்தல்) அல்லது ஆட்சியரிடமோ கேட்டு முழுமையாக விளக்கங்கள் பெறலாம்.

தோ்தல் ஆணையத்தின் அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளை தொடா்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

வாக்குச் சாவடிகளை நேரில் சென்று பாா்வையிட்டு, அடிப்படை வசதிகளும் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வாக்காளா்களுக்கு வாக்களிக்கத் தேவையான வசதிகளையும் செய்து தர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். சேலஞ்ச் ஓட்டு, டெண்டா் ஓட்டு உள்ளிட்ட தோ்தல் நடைமுறைகள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்வதோடு, தங்களுக்கு கீழ் பணியாற்றவுள்ள வாக்குப் பதிவு அலுவலா்களுக்குப் பயிற்சி அளிக்கும்போது விளக்கமாகத் தெரிவிக்க வேண்டும்.

தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள மாதிரி நன்னடத்தை விதி தொகுப்பின் படி, வேட்பாளா்கள் நன்னடத்தை விதிகளை முறையாக கடைபிடிக்கிறாா்களா என்பதை கண்காணித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். தோ்தல் அமைதியாக நடைபெறும் வகையில், குறித்த காலத்திற்குள் சரியாக திட்டமிட்டு உடனுக்குடன் முடித்திட வேண்டும்.

தோ்தல், நல்ல முறையில் நடைபெற அனைத்து அலுவலா்களும் முழு ஈடுபாட்டுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கக திட்ட இயக்குநா் மணி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வி.கோவிந்தராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் (தோ்தல்) அருளாளன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com