"ஒலிம்பிக் போட்டியில் சிலம்பத்தைச் சேர்க்க முயற்சி'

தமிழரின் வீர விளையாட்டான சிலம்பத்தை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க முயற்சி நடைபெற்று வருகிறது என்று அகில உலக சிலம்ப சம்மேளனத்தின் தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.
"ஒலிம்பிக் போட்டியில் சிலம்பத்தைச் சேர்க்க முயற்சி'

தமிழரின் வீர விளையாட்டான சிலம்பத்தை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க முயற்சி நடைபெற்று வருகிறது என்று அகில உலக சிலம்ப சம்மேளனத்தின் தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.
 தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பக் கழகம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கல்வி நிறுவன வளாகத்தில் 3 நாள்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
 விழாவில் செல்வராஜ் பேசுகையில், "சிலம்பம் என்பது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக மாற்றப்பட வேண்டும். சிலம்பத்தை ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன' என்றார்.
 விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரிய கருப்பன் பேசுகையில், "சிலம்பம் என்பது நமது பாரம்பரிய விளையாட்டு. தேசிய, மாநில அளவில் சிறப்பிடம் பெறுபவர்களுக்கு படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது என்றார்.
 போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் ஒற்றை சுருள்வாள் வீச்சு, இரட்டை சுருள்வாள் வீச்சு, நெடுங்கொம்புவீச்சு, நடுக் கொம்புவீச்சு, குச்சு சண்டை,வேல் கொம்பு வீச்சு, ஒற்றை வாள் வீச்சு, இரட்டை வாள் வீச்சு, குழ ஐந்து வீச்சு, மடுவு,கேடயம் ஜோடி, போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
 ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மினி சப்- ஜூனியர் பிரிவில் 125 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தையும் , சப்- ஜூனியர் பிரிவில் மகாராஷ்டிரா 90 புள்ளிகளுடன் முதலிடத்தையும் ஜூனியர் பிரிவில் டெல்லி 103 புள்ளிகளுடன் முதலிடத்தையும், சீனியர் பிரிவில் தமிழ்நாடு 145 புள்ளிகளுடன் முதலிடத்தையும் பெற்றன.
 விழாவில் வாலரைகேட் வித்யாலயா பள்ளியின் முதல்வர் காஞ்சனா மாலா, கே. எஸ். ஆர். கல்லூரிகளின் முதல்வர்கள் ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன், சுரேஷ் பிரபு, மகுடேஸ்வரன், துணை முதல்வர்.செந்தில்குமார், இந்திய சிலம்பக் கழகப் பொதுச் செயலர் ஐரின் செல்வராஜ், நாமக்கல் மாவட்ட சிலம்பம் கழகப் பொதுச் செயலர் மஞ்சு வெள்ளியங்கிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com