விசைத்தறித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசைத்தறியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு

குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசைத்தறியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 25 சதவீத போனஸ், 75 சதவீத கூலியுயர்வு வழங்கக் கோரி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . 
நாமக்கல் மாவட்ட விசைத்தறித் தொழிலாளர் சங்கம் - சிஐடியு சார்பில், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகரத் தலைவர் ஜி.மோகன் தலைமை வகித்தார். சங்க மாவட்டத் தலைவர் எம்.ஆர்.முருகேசன், நகரச் செயலர் கே.பாலுசாமி, நகரப் பொருளாளர் பி.என்.வெங்கடேசன், நிர்வாகிகள் பி.நாகராஜ், ஆர்.எத்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் எஸ்.ஆறுமுகம், பஞ்சாலை தொழில்சங்க மாவட்டத் துணைச் செயலர் பி.சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசைத்தறிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 25 சதவீத போனஸ், 75 சத கூலியுயர்வு கேட்டு பல முறை நேரிலும், கடிதம் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறித் தொழிலாளர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். இப்பிரச்சனைக்கு தீர்வு காண கோரி, கடந்த 23-ஆம் தேதி முதல் நடைபயணப் பிரசாரம் நடைபெற்றது. 
எனவே, இப்பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி குமாரபாளையம் வட்டாட்சியர் ஆர்.ரகுநாதனிடம் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com