பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மத்திய அரசின் பெண்குழந்தைகளை பாதுகாப்போம், கற்பிப்போம் என்ற திட்டம் கீழ் பள்ளி மாணவர்கள்

மத்திய அரசின் பெண்குழந்தைகளை பாதுகாப்போம், கற்பிப்போம் என்ற திட்டம் கீழ் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
பெண் குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம் (பி.பி.பி.பி) திட்டம் பெண்குழந்தை பிறப்பு விகிதக் குறைபாடு, மற்றும் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு தொடர்பான பிரச்னைகளை தீர்க்கும் வகையில் இத் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. 
இந்த திட்டத்தின் பிரதான அம்சமே தேசிய அளவில் பெண்குழந்தை குறித்த விழிப்புணர்வு மற்றும் பிரசாரங்கள் மேற்கொள்வதுதான்.  பெண் குழந்தைகள் குறித்து மக்கள் மனதில் உள்ள எண்ணத்தினை மாற்றுதல்,  உணர்வுப்பூர்வமாக்குதல்,  விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சமுதாய அடிப்படையிலான ஆதரவைத் திரட்டுதல் ஆகியவையும் இத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சம்.
இதன்படி,  நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இதில் பள்ளி மாணவர்கள் திட்டத்தை விளக்கும் வகையில் பி.பி.பி.பி வடிவில் மாணவர்கள் அணிவகுத்து அமர்ந்திருந்தனர். 
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பி.ரஞ்சிதபிரியா தலைமை வகித்தார்.   நிகழ்ச்சியை மாவட்ட கல்வி அலுவலர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.  இதில் குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள்,  மாணவர்கள் பங்கேற்றனர்.
இதனையடுத்து, பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி அஞ்சல் அட்டை மூலமாக பள்ளி மாணவர்களே எழுதி அனைத்து அரசுத் துறை அதிகாரிகள்,  பள்ளி தலைமை ஆசிரியர்கள்,  கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அஞ்சலகம் மூலம் அனுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com