கோழிப் பண்ணைகளில் பக்கவாட்டில் திரைசீலை கட்ட அறிவுறுத்தல்

பனி தாக்குதலில் இருந்து கோழிகளை பாதுகாக்க பண்ணைகளில் பக்கவாட்டில் திரைசீலை கட்ட வேண்டும் என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


பனி தாக்குதலில் இருந்து கோழிகளை பாதுகாக்க பண்ணைகளில் பக்கவாட்டில் திரைசீலை கட்ட வேண்டும் என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அடுத்த 3 நாள்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை. வானம் தெளிவாகவும், பனி மூட்டத்துடனும் காணப்படும். பகல் வெளிச்ச கால அளவு குறைந்து கொண்டே வருவதால், இளம் முட்டை கோழிகளுக்கு செயற்கை ஒளி அவசியம் தேவை. அதிக பனி காரணமாக கோழிகளில் தண்ணீர் அருந்துவது குறைந்து காணப்படும். 
தீவன எடுப்பு 110 கிராமுக்குக் குறைவாக காணப்படும் பட்சத்தில், உயர் மனைகளில் பக்கவாட்டில் திரைசீலையைக் கட்டி கோழிகளை நேரடியாக பனி தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
கடந்த வாரம் கோழியின நோய்க் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் இறக்கை அழுகல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனால் கோழிப் பண்ணையாளர்கள் கோழித் தீவனத்தில் கிளாஸ்டிரியம், ஈகோலை மற்றும் ஸ்டெப்லோகாக்கஸ் கிருமியின் தாக்கம் உள்ளதா? என தீவன பரிசோதனை செய்து, அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com