சோலார் விளக்கு பொறி செயல்விளக்க முகாம்

கொல்லிமலை வட்டாரம் வாழவந்திநாடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் சோலார் விளக்கு பொறிகுறித்த செயல் விளக்க முகாம் அண்மையில் நடைபெற்றது.


கொல்லிமலை வட்டாரம் வாழவந்திநாடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் சோலார் விளக்கு பொறிகுறித்த செயல் விளக்க முகாம் அண்மையில் நடைபெற்றது.
இதில் வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புசெல்வி, தலைமை வகித்தார். வட்டார அட்மா தலைவர் பெ.துரைசாமி முன்னிலை வகித்தார்.
விவசாயிகளுக்கு சோலார் விளக்குப் பொறியின் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. சோலார் விளக்கு பொறி மூலம் பொருளாதார சேதாரத்தை உண்டாக்கும் அனைத்து பறக்கும் பூச்சிகளையும் கவரக்கூடியது.
தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக தாய் அந்துப்பூச்சியை அழிப்பதன் மூலம் அதன் முட்டைகளிலிருந்து 300-500 வெளி வரும் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும், இப் பொறியின் மூலம் பூச்சி மேலாண்மையில் நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை அடையாளம் கண்டு கட்டுப்படுத்தலாம்.
பொருளாதார சேதார நிலை கண்காணித்து ரசாயன பூச்சிக்கொல்லி பயன்பாட்டைக் குறைக்கலாம். இதனால், நன்மை செய்யும் பூச்சிகள் பெருமளவில் பெருகி மகரந்த சேர்க்கைக்கு உறுதுணை புரிந்து அதிக மகசூல் பெற உதவும். மனித உதவியும் மின்சாரமும் இதை இயக்குவதற்கு தேவைபடுவதில்லை.
ரசாயனத் தாக்கத்திலிருந்து மக்களை விடுவித்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது என செயல் விளக்க நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
உதவி விதை அலுவலர் உதயக்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்லதுரை, காமராஜ், விஜயசாந்தி ஆகியோர் தமிழக அரசின் மானியத் திட்டங்கள் விதைப் பண்ணை அமைத்தல், தேனீ வளர்த்தல் போன்ற வேளாண்மைத்துறையின் திட்டப் பணிகளின் விவரங்களை விவசாயிகளுக்கு விளக்கினர்.
அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் மா. ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் சோலார் விளக்குப்பொறியின் சிறப்பம்சங்களான புற ஊதா ஒளி தொழில்நுட்பம் போன்றவற்றின் செயல்விளக்கம், அட்மா திட்ட பணிகள், திட்ட செயல்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com