பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் பெற்றுக்கொள்ளலாம்

1,000 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நியாய விலைக் கடைகளில் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.

1,000 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நியாய விலைக் கடைகளில் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.
குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் கடைக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை அகதிகள் குடும்பத்தினருக்கும், பொங்கல் பரிசு தொகுப்பு (ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இரண்டடி நீள கரும்பு) மற்றும் பணம் ரூ. 1,000 வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, நடைமுறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை அகதிகள் குடும்பத்தினருக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் யார் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
திங்கள்கிழமை முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 1.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்படும். 
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பணம் ரூ. 1,000 ஆகியவை ஸ்மார்ட் ரேஷன் கார்டு அடிப்படையில்தான் வழங்கப்படும்.
ஸ்மார்ட் கார்டு இல்லாத இனங்களில் குடும்ப உறுப்பினர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி  எண்ணுக்கு வரும் ஓடிபி எண் அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். 
இத் திட்டத்தின் செயல்பாட்டில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு 04286-281116 என்ற தொலைபேசி எண், மாவட்ட வழங்கல் அலுவலரை 94450-00232 என்ற செல்லிடப்பேசி எண், தனி வட்டாட்சியரை 94450-00233 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com