ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் மருந்து வணிகத்தைத் தடை செய்யக் கோரி நாமக்கல்லில் மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆன்லைன் மருந்து வணிகத்தைத் தடை செய்யக் கோரி நாமக்கல்லில் மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆன்லைன் மருந்து விற்பனை பொதுமக்களுக்கு ஆரோக்கியமற்றது. மருத்துவரின் பரிந்துரையில் மட்டுமே விற்க வேண்டிய மருந்துகள் தவறான பயன்பாட்டால் நமது சமுதாயத்தைச் சீரழிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். ஆன்லைன் மருந்துகளின் ஆதிக்கம் அதிகமானால் கிராமப்புறம் மற்றும் சிறிய நகரங்களில் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பது அரிதாகிவிடும்.
ஆன்லைன் மருந்து வணிகம் நடைமுறைக்கு வந்தால், மருந்துக் கடை தொழிலையே நம்பி இருக்கும் 8 லட்சம் பேர் நேரடியாகவும், 40 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும், அவர்களுடைய குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும்.
எனவே, மத்திய அரசு இந்தியா முழுவதும் ஆன்லைன் மருந்து வணிகத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் தாலுகா மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில அமைப்புச் செயலர் அன்பழகன் தலைமை வகித்தார்.
தாலுகா சங்கச் செயலர் தெய்வமணி, மாவட்ட நிர்வாக செயலர் மோகனச்சந்திரன், ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மேகநாதன், முன்னாள் தலைவர் கோபிரத்தினம் உள்ளிட்ட மருந்து வணிகர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தாலுகா சங்கப் பொருளாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com