பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

நாமக்கல்லில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாமக்கல்லில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளார் சங்கம் சார்பில் நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ராஜகோபால் தலைமை வகித்தார். பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.  தொழிற்சங்க நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் கோபால் ஆகியோர் பேசினர்.
இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளிக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 18,000 வழங்க வேண்டும். பொதுத் துறைகளின் பங்கு விற்பனையை நிறுத்த வேண்டும். 
ஒப்பந்த ஊழியர் முறையை ரத்து செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், ரயில்வே, காப்பீடு, பாதுகாப்புத் துறைகளில் பன்னாட்டு மூலதனத்தை அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரவிமணி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com