கொல்லிமலை உழவர் உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

கொல்லிமலை வட்டாரம், சித்தூர்நாடு கிராமத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் வேளாண்மை

கொல்லிமலை வட்டாரம், சித்தூர்நாடு கிராமத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் உழவர்கள் உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாடு, சேவைகள் குறித்து ஒரு நாள் பயிற்சி அண்மையில்
நடைபெற்றது.
இதில் வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புசெல்வி தலைமை வகித்து,  பயிற்சியின் நோக்கம், கொல்லிமலை வட்டாரத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், தீர்மான பதிவேடுகள் பராமரிப்பு, கூட்டுப் பண்ணை திட்டத்தின் கீழ் குழுவுக்கு வழங்கப்படும் அரசு அங்கீகாரம், வேளாண் இயந்திரங்கள் பெற்று தங்களுக்குள் வாடகைக்கு விட்டு சேமிப்புக் கணக்கில் சேர்ப்பித்தல் குறித்தும் விளக்கமளித்தார்.
தேசிய வேளாண்மை நிறுவனம் மாவட்ட திட்ட உதவி அமைப்பாளர் கிரண்குமார், உழவர்கள் உற்பத்தியாளர்கள் நிறுவனம் அமைத்தல் பயிற்சியில் கலந்து கொண்ட உழவர்கள் உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்களுக்கு நிறுவனம் அமைத்தல் தொடர்புடைய வேளாண் சார்ந்த தொழில்கள் மற்றும் வேளாண்மை பொறியியல் சார்ந்த நிறுவனங்கள் ஆரம்பித்தல், அரசின் சலுகைகள், நிறுவனத்துக்காக திறன் மேம்பாட்டுப் பயிற்சி செயல் விளக்கம், மானியங்கள், தொழில் நுட்ப உதவிகள் குறித்து விளக்கினார்.
துணை வேளாண்மை அலுவலர் சேகர், துறையின் மானிய திட்டங்கள் குறித்துப் பேசினார். உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்லதுரை, காமராஜ், விஜயசாந்தி ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உயிர் உர விதை நேர்த்தி, சோலார் விளக்கு பொறி செயல் விளக்கம், செய்து காண்பித்தனர். அட்மா திட்ட வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் மா.ரமேஷ் வேளாண் இயந்திரங்களின் பயன்பாடு குறித்தும், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் அட்மா திட்ட செயல்பாடுகள், உழவன் செயலியின் செயல்பாடுகள், பயன்கள் குறித்து பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com