பாவை கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி

பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி  ஏழு  நாள்கள் நடைபெற்றன.  முன்னதாக பயிற்சியை பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்து பேசியது:   ஒவ்வொரு மாணவியும் தன் கல்லூரி வாழ்வில் முதலடி எடுத்து வைக்கும் போதே,  தன் இலக்கினை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முக்கியமான செயல்களில் கவனம் செலுத்த முடியும். நல்ல முடிவுகளை எடுத்திடவும், தேவையற்றதை ஒதுக்கவும், ஒரு வேலையை மிகச்சரியாக செய்யவும் முடியும். 
இவையனைத்தையும் மாணவியர் தொடர்ந்து செய்யும் பொது இலக்கினை அடைவது மிக எளிதானதாக அமையும். எந்த செயலுக்கும் எதிர்மறை எண்ணங்கள் கொண்டவராலும்,  அச்செயலை புரிவதன் மூலம் தோல்வி காண்போமோ என அச்சப்படுபவர்களாலும், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன மாதிரியான எண்ணம் கொள்வார்கள் என சிந்திப்பவர்களாலும், இலக்கினை நிர்ணயிக்க முடியாது. ஒரு வேலையினை செய்வதற்கு சோம்பேறித்தனம் கொண்டு அதனை ஒத்திப்போடுபவர்களும், தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுபவர்களும் இலக்கினை அடைவது சிரமம். எனவே இம் மாதிரியான எண்ணங்கள் இருந்தால் உடனடியாக அவ்வெண்ணங்களை களைய வேண்டும். எந்த ஒரு வேலையையும் திருத்தமாகவும்,  நாட்டத்துடனும் செய்ய முன்வர வேண்டியது அவசியம்.
யாருக்கும்  அடிமையாக இல்லாமல் சுதந்திரத்துடனும், லட்சியத்தை அடைய வேண்டும் என்ற வேட்கையுடனும் இருப்பதே தனி நபர் பிரதான நோக்கம் ஆகும். கல்வி,  செல்வம், வீரம் இவற்றுள் முதன்மையானதும், முக்கியமானதும் கல்வி மட்டுமே. படிக்காமல் இருப்பதை விட, பிறக்காமல் இருப்பதே மேல் என்பதற்கேற்ப பெண்களின் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் கண் போன்ற கல்வியை அனைவரும் கற்க வேண்டும் என்றார்.
இவ்விழாவில் பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர்  சி.ராஜேஸ்வரி,  முதன்மையர்கள் ஆர்.கஸ்தூரிபாய்,  கே.செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com