காற்றின் வேகம் குறைய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

கடந்த வாரங்களில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்பட்டாலும், வரும் நாள்களில் அதன்

கடந்த வாரங்களில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்பட்டாலும், வரும் நாள்களில் அதன் வேகம் குறைய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது;  வரும் நான்கு நாள்களுக்கு வானம்   பொதுவான  மேகமூட்டத்துடன் காணப்படும்.  லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. காற்று மணிக்கு 6 கிலோ  மீட்டர் வேகத்தில் மேற்கில் இருந்து வீசக்கூடும்.  வெப்பநிலை அதிகபட்சமாக    98.6 டிகிரியும்,  குறைந்தபட்சம் 78.8 டிகிரியுமாக இருக்கக் கூடும்.
சிறப்பு வானிலை ஆலோசனை: மாவட்டத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.  காற்றின் வேகம் அதிகமாகக் காணப்பட்டாலும். கடந்த வாரத்தை விட அதன் வேகம் குறைய வாய்ப்புள்ளது.  சாரல் மழையும், காற்றின் வேகமும் கொண்ட வானிலை,  கோழிகளுக்குச் சாதகமாகக் காணப்பட்டாலும். முட்டை சம்பந்தப்பட்ட குறைபாடுகள் இருக்கும்.  முட்டையின் எடை மற்றும் முட்டை ஓடு உடைவு ஆகியவை பரவலாகக் காணப்படுகின்றன.  முட்டை எடையைக் கூடுதலாக்க டன்னுக்கு 6 முதல் 8 கிலோ வரை தாவர எண்ணெய்யும், ஓடு சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் அளவுகளைச் சரிப்படுத்த வேண்டும்.  மக்காச் சோளத்தின் வரவு குறைவாக இருப்பதும்,   அதன் விலை அதிகமாக இருப்பதாலும்,  கோதுமை போன்ற தானியங்களை,  மக்காச் சோளத்திற்குப் பதிலாகச் சேர்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com