1.40 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும், 1.40 லட்சம் மாணவ, மாணவியருக்கு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும், 1.40 லட்சம் மாணவ, மாணவியருக்கு, ஸ்மார்ட் கார்டு வடிவில் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
தமிழகம் முழுவதும் 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு, அவர்களது புகைப்படம், முகவரியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.  இதன் தொடக்க விழா முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியால் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்படுகிறது.  அனைத்து மாணவ, மாணவியரின் விவரங்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால்,  அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அச்சிட்டு வழங்குவதற்கான நடவடிக்கையை
மேற்கொள்வர்.
நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தமட்டில்,  688 அரசு தொடக்கப் பள்ளிகள், 163 நடுநிலைப் பள்ளிகள்,  61 உயர்நிலைப்பள்ளிகள், 93 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,005 பள்ளிகள் செயல்படுகின்றன.  இவை தவிர, அரசு உதவி பெறும் பள்ளிகள் எண்ணிக்கையாக,  துவக்கப் பள்ளி 52,  நடுநிலைப்பள்ளி 19,  உயர்நிலை 6, மேல்நிலை 11 என மொத்தம் 88 பள்ளிகள் உள்ளன.  இதில், அரசுப் பள்ளிகளில் 90 ஆயிரம் மாணவ, மாணவியர் வரையிலும்,  அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 45 முதல் 50 ஆயிரம் மாணவ, மாணவியரும் படிக்கின்றனர்.  
முதல்வர் தொடங்கி வைத்தவுடன், மாவட்டம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் தலைமை ஆசிரியர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட இருப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com