குறிஞ்சி நீட் தேர்வு பயிற்சி மையத்தில்இன்று வகுப்புகள் தொடக்கம்

நாமக்கல் குறிஞ்சி நீட் தேர்வு பயிற்சி மையத்தில், நிகழாண்டிற்கான வகுப்புகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) தொடங்குகின்றன.நாமக்கல் குறிஞ்சி நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்தில் (தமிழ் மற்றும்

நாமக்கல், ஜூன் 13:  நாமக்கல் குறிஞ்சி நீட் தேர்வு பயிற்சி மையத்தில், நிகழாண்டிற்கான வகுப்புகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) தொடங்குகின்றன.
நாமக்கல் குறிஞ்சி நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்தில் (தமிழ் மற்றும்  ஆங்கில வழி) நீட்  ரிப்பீட்டர்ஸ் பேட்ச் எனும்  ஓராண்டு பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. ஆந்திரம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நீட் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றி எண்ணற்ற வெற்றியாளர்களை உருவாக்கிய ஆசிரியர்களைக் கொண்டு  நீட் தேர்வுக்கான முழு நேர பாட வகுப்புகள் தினந்தோறும் நடைபெறவுள்ளன.
இந்த பயிற்சி மையத்தில் கட்டணச் சலுகையாக, 2019 நீட் தேர்வில் 375 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு இலவச பயிற்சி கட்டணம்,  200 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு பயிற்சி கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. மேலும்,  தமிழ் வழி மாணவ, மாணவியருக்கு தமிழ் வழியில் பயிற்சி மற்றும் கட்டணச் சலுகை உண்டு. பிளஸ் 2 பொதுத் தேர்வில் 500 மதிப்பெண்கள், பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் 400 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பயிற்சி கட்டணச் சலுகை அளிக்கப்படும். இம்மையத்தில் மாணவ, மாணவியருக்கென தனித்தனி விடுதி வசதிகள் இருக்கின்றன என்று குறிஞ்சி நீட் பயிற்சி மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com