கோழிகளுக்கு தீவன எடுப்பு அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

காற்றின் வேகம் காரணமாக, கோழிகளுக்கு வெப்ப அயற்சி குறைந்து தீவன எடுப்பு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


காற்றின் வேகம் காரணமாக, கோழிகளுக்கு வெப்ப அயற்சி குறைந்து தீவன எடுப்பு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக,  நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை  ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் நான்கு நாள்களுக்கும் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். மழை 3 மி.மீட்டர் அளவில் பெய்யக்கூடும். காற்று மேற்கில் இருந்து 10 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 96.8 டிகிரியும்,  குறைந்தபட்சம் 75.2 டிகிரியாகவும் இருக்கும். 
சிறப்பு வானிலை ஆலோசனை: வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன்,  ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை இருக்கும். இரவில் வெப்பம் குறைந்து காணப்படும். காற்றின் வேகம் காரணமாக கோழிகளில் வெப்ப அயற்சி குறைந்து, தீவன எடுப்பு அதிகரிக்கத் தொடங்கும். இதனால் இளம் கோழிகளில் இதுநாள் வரையிருந்த முட்டை எடை குறைவான பிரச்னைகள் இனி நீங்க ஆரம்பிக்கும். பக்கவாட்டில் 3 அடி உயரத்திற்கு படுதாவை கட்ட வேண்டும். கோழிகளுக்கு தீவன எடுப்பை கண்காணித்து, காற்றில் தீவனம் விரயம் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com