புதிய கல்விக் கொள்கை வரைவறிக்கையை  அனைத்து மாநில மொழிகளிலும் வெளியிட கோரிக்கை

பரமத்தியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பரமத்தி ஒன்றிய செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

பரமத்தியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பரமத்தி ஒன்றிய செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
புதிய கல்விக் கொள்கை-2019 வரைவறிக்கையை தமிழ் மொழி உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளிலும் வெளியிட வேண்டும். பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கு 6 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், பள்ளி இணைப்புத் திட்டத்தை கைவிடுதல் என்பன உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோவின் 9 அம்சக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். மாவட்ட கல்வி அலுவலரிடம் குவிந்துள்ள அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு வட்டாரக் கல்வி அலுவலருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்துத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தூய்மை பணியாளர்களை நியமித்து, அந்தந்த மாதங்களில் ஊதியங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பரமத்தி ஒன்றியத் தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகசெல்வராசன்,துணைச் செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். 
ஒன்றிய கொள்கை விளக்கச் செயலாளர் மலர்விழி வரவேற்றார். ஒன்றிய செயலாளர் சேகர்,  தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினார். முடிவில் ஒன்றிய பொருளாளர் பத்மாவதி நன்றி
கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com