மின் மோட்டாரில் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

மின் மேட்டாரில் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராசிபுரம் நகராட்சி ஆணையர் வே.விஜயாஸ்ரீ தெரிவித்துள்ளார்.

மின் மேட்டாரில் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராசிபுரம் நகராட்சி ஆணையர் வே.விஜயாஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:-
ராசிபுரம் - எடப்பாடி கூட்டுக் குடிநீர்த் திட்டம் வாயிலாக, நெடுங்குளம் காட்டூர் பகுதியில் இருந்து காவிரி நீரை 58 கி.மீ. தொலைவிலிருந்து தினசரி 4.50 மில்லியன் லிட்டர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பெறப்பட்டு 5 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றப்பட்டு, 5 நாள்களுக்கு ஒரு முறை ராசிபுரம் நகரில் பொது மக்களுக்கு  குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது  மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதனால்,  பொதுமக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். எனவே வீடுகள், ஹோட்டல்களில் உள்ள குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சக் கூடாது. மீறினால் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும்.  குடிநீர் குறித்த புகார் தெரிவிக்க 04287-222859, 226868 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com