ஐ.ஐ.டி., மற்றும் நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி: டிரினிடி அகாதெமி பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஐ.ஐ.டி., நீட் நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்காக,  நாராயணா குழுமத்துடன், நாமக்கல் டிரினிடி அகாதெமி மெட்ரிக் பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐ.ஐ.டி., நீட் நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்காக,  நாராயணா குழுமத்துடன், நாமக்கல் டிரினிடி அகாதெமி மெட்ரிக் பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
நாமக்கல்லில், கடந்த 30 ஆண்டுகளாக, டிரினிடி அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கல்வி பணியாற்றி வருகிறது.  இப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பான வாய்ப்பை உருவாக்கும் வகையில்,  ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நாராயணா குழுமத்துடன் நீட், ஐ.ஐ.டி. மற்றும் ஜெ.இ.இ. ஆகிய நுழைவுத் தேர்வு பயிற்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
நாராயணா குழுமமானது, 18 மாநிலங்களில் 650 கிளைகளில் நீட் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது.  இந் நிறுவனம், டிரினிடி அகாதெமியில் வரும் கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடக்கப் பயிற்சியும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கும்.  மேலும், 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு சிறப்பு வருட பயிற்சியும்,  மார்ச் 22-ஆம் தேதி முதல் 40 நாட்களுக்கு கிராஸ் கோர்ஸும் நடத்தப்படும். இவ் வாய்ப்பை மாணவர்களும், பெற்றோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டிரினிடி அகாதெமி பள்ளித் தலைவர் மருத்துவர் ஆர்.குழந்தைவேல், செயலர் டி.சந்திரசேகர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com