கோடைகால மேலாண்மை முறைகளை கையாள வானிலை மையம் அறிவுரை
By DIN | Published On : 24th March 2019 05:27 AM | Last Updated : 24th March 2019 05:27 AM | அ+அ அ- |

பண்ணைகளில் கோடைகால மேலாண்மை முறைகளை கையாள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பு: வரும் நான்கு நாள்களுக்கு, வெப்பநிலை அதிகபட்சமாக இருக்கும். தொடர்ந்து தீவிர முறையில் கோடைக்கால மேலாண்மையை, குறிப்பாக நீர் மேலாண்மையை கடைப்பிடித்து தண்ணீரின் விரயத்தை குறைக்க வேண்டும். இதர கால்நடைகளுக்கு கறவை மாடுகள், சினை மாடுகள், ஆடுகள் ஆகியவற்றை மேய்ச்சலுக்கு அனுப்பும் நேரத்தை காலை நேரத்திலும், வெயிலின் தாக்கம் குறைந்த மாலை நேரத்திலும் அனுப்ப வேண்டும். கடந்த வாரம் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சியால் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே. பண்ணையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல் சிறந்த கோடைகால மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். நாட்டுக்கோழிகளில் அம்மை நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், தாய் கோழிகளுக்கு அம்மை தடுப்பூசி போட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.