பாலியல் வன்முறை ஒழிப்பு கமிட்டி அமைக்கசிஐடியு மகளிர் மாநாட்டில் வலியுறுத்தல்

மகளிர் பணியாற்றும் இடங்களில் பாலியல் வன்முறை ஒழிப்பு கமிட்டி அமைக்க வேண்டும் என நாமக்கல்லில்

மகளிர் பணியாற்றும் இடங்களில் பாலியல் வன்முறை ஒழிப்பு கமிட்டி அமைக்க வேண்டும் என நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிஐடியு மகளிர் ஒருங்கிணைப்புக்குழு  மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
நாமக்கல் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி தலைமை வகித்து பேசினார். பெண்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் வன்முறை ஒழிப்பு கமிட்டி ஏற்படுத்தப்பட வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பெண் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும்.
ஆண்களுக்கு நிகராக, பெண் தொழிலாளர்களிடம் வேலைப்பளுவை திணிக்கக் கூடாது. ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். ராசிபுரம் குழந்தை விற்பனை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை, மகளிர் ஒருங்கிணைப்புக் குழு இணை ஒருங்கிணைப்பாளர் ரேவதி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com