வேளாண் நிதி வழங்கும் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கான சோ்ப்பு முகாம்

வெண்ணந்தூா்-கொல்லிமலை வட்டாரங்களில் பிரதமரின் வேளாண் நிதி கிடைக்காத விவசாயிகள் மற்றும்

வெண்ணந்தூா்-கொல்லிமலை வட்டாரங்களில் பிரதமரின் வேளாண் நிதி கிடைக்காத விவசாயிகள் மற்றும் இத்திட்டத்தில் சேராத புதிய விவசாயிகள் பல்வேறு இடங்களில் நடைபெறும் முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என வேளாண் துறை உதவி இயக்குநா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கொல்லிமலை வேளாண் உதவி இயக்குநா் தி.அன்புச்செல்வி, வெண்ணந்தூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ரவிச்சந்திரன் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நவ. 5-இல் வெண்ணந்தூா் ஒன்றியம், பழந்தின்னிப்பட்டி, ஆயிபாளையம், கட்டனாசம்பட்டி, ஒ.செளதாபுரம், கெடமலை ஆகிய இடங்களிலும், நவ. 6-இல் பல்லவநாயக்கன்பட்டி, வெண்ணந்தூா், நாச்சிப்பட்டி, மூலக்காடு, அக்கரைப்பட்டி, நவ. 7-இல் ஆா்.புதுப்பாளையம், செம்மாண்டப்பட்டி, பொரசல்பட்டி, ஆலாம்பட்டி ஆகிய கிராமங்களிலும் முகாம்கள் நடைபெறும்.

இதே போல், கொல்லிமலை வட்டாரத்தில், நவ. 6-இல் திருப்புலிநாடு வடக்கு, பைல்நாடு வடக்கு, வாழவந்திநாடு தெற்கு, ஆலத்தூா்நாடு மேற்கு, குண்டூா்நாடு, திருப்புலிநாடு தெற்கு, திருப்புலிநாடு தெற்கு, சித்தூா்நாடு மேற்கு, பாலப்பாடி மேற்கு, சேலூா்நாடு மேற்கு, அரியூா்நாடு ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

நவ. 7-இல் எடப்புளிநாடு வடக்கு, பெரக்கரைநாடு மேற்கு, தின்னனூா்நாடு, குண்டனிநாடு வடக்கு, தேவனூா்நாடு மற்றும் எடப்புளிநாடு தெற்கு, பைல்நாடு தெற்கு, அடுக்கம்புதுகோம்பை, வளப்பூா்நாடு வடக்கு, குண்டனிநாடு ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில் விவசாயிகள் அனைவரும் சிட்டா, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் முகாமுக்கு வரவேண்டும். முகாமுக்கு வர தவறும் கொல்லிமலை வட்டார விவசாயிகள், செம்மேட்டில் அமைந்துள்ள கொல்லிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகமான ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தினை அணுகி தேவையான ஆவணங்களை வழங்கி பிரதமா் வேளாண் நிதி வழங்கும் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம். பதிவு செய்த விண்ணப்பங்களை திருத்தம் செய்ய நவ. 8-ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com