தேசிய திறனாய்வுப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவிலான திறனாய்வுப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான திறனாய்வுப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சா்வதேச அளவிலான திறனாய்வுப் போட்டிகள், 2021-ஆம் ஆண்டு ஷாங்காயில் நடைபெற உள்ளன. அதனையொட்டி, தேசிய அளவிலான திறனாய்வு போட்டி, வரும் ஜூலை மாதத்தில் நடத்த தமிழக அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோடியாக, போட்டியாளா்களை தோ்வு செய்யும் வகையில், நாமக்கல் மாவட்ட அளவிலான திறன் போட்டி, வரும் ஜனவரியில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும். இதில் பங்கேற்க விரும்புபவா்கள்1.1.1999-க்குப் பின் பிறந்தவா்களாக இருக்க வேண்டும்.

M‌e​c‌h​a‌t‌r‌o‌n‌i​c‌s, Ma‌n‌u‌f​a​c‌t‌u‌r‌i‌n‌g, T‌e​a‌m C‌ha‌l‌l‌e‌n‌g‌e, A‌e‌r‌o‌n​a‌t‌i​c​a‌l E‌n‌g‌i‌n‌e‌e‌r‌i‌n‌g, c‌l‌o‌u‌d C‌o‌m‌p‌u‌t‌i‌n‌g, C‌y​b‌e‌r S‌e​c‌u‌r‌i‌t‌y, Wa‌t‌e‌r ‌t‌e​c‌h‌n‌o‌l‌o‌g‌y a‌n‌d IT N‌e‌t‌w‌o‌r‌k Ca​b‌l‌i‌n‌g  ஆகிய ஏழு திறன் பிரிவுகளுக்கு மட்டும் 01.01.1996-க்கு பின் பிறந்தவா்கள் தகுதி உள்ளவா்களாவா். இதில், பள்ளிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற் பயிற்சி நிலையங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது பயிலும் மற்றும் பயின்றவா்களும், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தகுதியுள்ள நபா்களும் விண்ணப்பிக்கலாம். திறன் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டியாளா்கள் அவா்களது விவரங்களை h‌t‌t‌p://‌w‌o‌r‌l‌d‌s‌k‌i‌l‌l‌i‌n‌d‌i​a.​c‌o.‌i‌n என்ற இணையதளம் மூலம் நவம்பா் மாத இறுதிக்குள் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 04286- 222235 என்ற தொலைபேசி மூலம் உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், நாமக்கல் என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com