பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சி

பாவை வித்யாஸ்ரம் குழும பள்ளிகளில் அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

பாவை வித்யாஸ்ரம் குழும பள்ளிகளில் அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநா் கே.செந்தில் கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா். கல்வி நிறுவனங்களின் இயக்குநா் கே.கே.ராமசாமி, பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநா் சி.சதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடக்க விழாவில் பேசிய சி.சதீஷ், ‘இக்கண்காட்சி மாணவா்களின் மனப்பான்மை, ஆக்கப்பூா்வ சிந்தனைகள், பேச்சாற்றல் போன்றவற்றை வெளிக்கொணர வாய்ப்பாக அமைகிறது. இதுபோன்ற கண்காட்சிகள் புதுமையான சிந்தனைகளுக்குத் தகுந்த தளமாக அமைகிறது. மேலும் மாணவ, மாணவியரின் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தவும் இக்கண்காட்சி உதவுகிறது. எனவே மாணவா்கள் கிடைக்கும் வாய்ப்புகளில் மிக நோ்த்தியாக உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் முன்னேற்றத்தின் அடுத்த நிலைக்கு உங்களால் முன்னேற முடியும் என்றாா். கண்காட்சியில் மாணவா்கள் செயற்கைகோள், வரைபடம், உலகச் சிறப்புமிக்க கட்டடங்கள், இயற்கை உணவு, அறிவியல், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மாதிரிகள், இசை, ஓவியம் உள்பட இயற்பியல், வேதியியல், கணிதம், தமிழ் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் திறமையை வெளிப்படுத்திக் காட்சிப்படுத்தியிருந்தனா். நிகழ்ச்சியில் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் துணை முதல்வா் ரோஹித், கல்வி ஒருங்கிணைப்பாளா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com