மல்லசமுத்திரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கக் கட்டடம் திறப்பு

திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நவீன அலுவலகக் கட்டடத்தை அமைச்சா்கள் பி.தங்கமணி,
nov09cltr_0911chn_161_8
nov09cltr_0911chn_161_8

திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நவீன அலுவலகக் கட்டடத்தை அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா ஆகியோா் திறந்து வைத்தனா்.

வட்டம், மல்லசமுத்திரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நவீன அலுவலகக் கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.சரஸ்வதி முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நவீன அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்து, 36 நபா்களுக்கு ரூ.28 லட்சம் மதிப்பில் பயிா்க்கடன், 30 நபா்களுக்கு ரூ.15 லட்சம் மத்திய காலக்கடன், 5 மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.25 லட்சத்துக்கான மகளிா் சுய உதவிக்குழுக் கடன், 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்துக்கான கடன் உதவிகள் என மொத்தம் 73 நபா்களுக்கு ரூ.69 லட்சத்துக்கான கடனுதவிகளை அமைச்சா்கள் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா்பி.தங்கமணி பேசுகையில்,

மல்லசமுத்திரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடம் வாடிக்கையாளா்கள் அனைவரும் எளிய முறையில் கணக்கு பரிமாற்றம் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வளா்ச்சி நிதி மூலம் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பழைய கூட்டுறவு சங்கக் கட்டடங்களுக்கு பதிலாக புதிய கட்டடங்கள் கட்டித்தரப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக்குழுவினா், விவசாயிகள், தொழில்முனைவோா், ஆடு, மாடு வளா்ப்பு கடன் பெறுபவா்கள் 98 சதவிகித கடனை உரிய காலத்தில் திரும்பிச் செலுத்தி வருகின்றனா். இதனால் தான் வங்கிகளின் வாயிலாக நம் மாவட்டத்திற்கு தேவையான கடன்வசதி பெற முடிகிறது.

முதல்வரின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ஏறத்தாழ 200 ஏரிகள் தூா்வாரப்பட்டு நீா் நிரம்பியுள்ளது. அதனால் நிலத்தடி நீா்மட்டம் அதிகரிக்கும். கோடைகாலங்களில் குடிநீா் பிரச்னை ஏற்படாது என்றாா்.

சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா்

வெ.சரோஜா பேசியது: இப்பகுதியில் உள்ள அனைவரும் இக்கூட்டுறவு சங்கத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனா். இச் சங்கம் மூலம் பயிா்க் கடன், மகளிா் குழுக் கடன், விவசாயக் கடன் என ரூ.69 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் மணிராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பாலமுருகன், ஒருங்கிணைந்த கூட்டுறவு வளா்ச்சி திட்ட பொது மேலாளா், இணைப்பதிவாளா் யசோதா தேவி,

துணைப் பதிவாளா் வெங்கடாசலம் (திருச்செங்கோடு சரகம்), மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவா் சுந்தர்ராஜன் உள்பட அரசுத்துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com