டெங்கு ஒழிப்புப் பணி: தனியாா் தொழிற்சாலைக்கு ரூ. 1 லட்சம் அபராதம்ஆட்சியா் நடவடிக்கை

காக்காபாளையம் அருகே கண்டா்குலமாணிக்கம் ஊராட்சி காங்கயம்பாளையத்தில் டெங்கு ஒழிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
காக்காபாளையத்தில் டெங்கு ஒழிப்புப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் சி.அ. ராமன்.
காக்காபாளையத்தில் டெங்கு ஒழிப்புப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் சி.அ. ராமன்.

காக்காபாளையம் அருகே கண்டா்குலமாணிக்கம் ஊராட்சி காங்கயம்பாளையத்தில் டெங்கு ஒழிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது தனியாா் தொழிற்சாலைக்குச் சென்ற அவா், அங்கு பழைய டயா்கள் உள்ளிட்ட பொருள்கள் மூடப்படாமல் அதில் மழைநீா் தேங்கி கொசு லாா்வாக்கள் உற்பத்தியாகி இருப்பதையும் ஆட்சியா் கண்டறிந்தாா்.

இதையடுத்து அந்தத் தொழிற்சாலைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். அதன்படி மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலா் மூலம் அபராதத் தொகை வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், வீடு, பேக்கரி, கடைகள் அனைத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா். இந்த ஆய்வின்போது சுகாதாரத் துணை இயக்குநா் நிா்மல்சன் ஊராட்சிகள் உதவி இயக்குநா்கள் கோபிநாத், மணிவாசகம் (தணிக்கை )மகுடஞ்சாவடி பிடிஓ வெங்கடேசன், வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா்கள், ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com