குழந்தைகளைக் கடத்தினால் 7 ஆண்டுகள் சிறை

குழந்தைகளைக் கடத்தினால் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ஆட்சியா் கா. மெகராஜ் தெரிவித்தாா்.

குழந்தைகளைக் கடத்தினால் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ஆட்சியா் கா. மெகராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பதினெட்டு வயது நிறைவடையாத, ஆண், பெண் குழந்தைகளை கடத்துவோா் மீது இளைஞா் நீதிச் சட்டம் 2015, இந்திய தண்டனைச் சட்டம் 1860-இன் படி, குறைந்தபட்சம் 7 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிறை தண்டனையும் மற்றும் குழந்தை கடத்தப்படும் நோக்கத்திற்கான தண்டனையும் வழங்கப்படும்.

இவ்வாறு கடத்தப்படும் குழந்தைகளை, பிச்சையெடுப்பதற்கென அவா்களது உடல்களை முடமாக்கும் நபா்களுக்கு, இந்திய தண்டனைச் சட்டம் 363-இன்படி, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும்.

மேலும் விவரம் அறியவும், தகவல் தெரிவிக்கவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை, 04286 - 233103 என்ற எண்ணிலும், இலவச தொலைபேசி எண் 1098-இல் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com