பெரிய சோளிபாளையம் அருகே சாலையில் தேங்கும் மழைநீா்

பரமத்திவேலூரை அடுத்துள்ள தெற்கு தொட்டிபாளையத்தில் மழைநீா் வெளியேற வழியின்றி சாலையில் தேங்கி நிற்பதால் அப் பகுதியில்
சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.

பரமத்திவேலூரை அடுத்துள்ள தெற்கு தொட்டிபாளையத்தில் மழைநீா் வெளியேற வழியின்றி சாலையில் தேங்கி நிற்பதால் அப் பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டு மாணவ, மாணவியா் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீரை வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வடகரையாத்தூா் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டிபாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தாா் வசித்து வருகின்றனா்.

இங்கு வசிக்கும் பொதுமக்கள் வேலைக்குச் செல்வதற்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்வதற்கும் தெற்கு தொட்டிபாளையத்தில் இருந்து சிறுநல்லிகோயிலில்-பெரியசோளிபாளையம் செல்லும் சாலையைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

கடந்த சில நாள்களாக பெய்த மழையால் அங்குள்ள விளை நிலங்கள், வீடுகள் மற்றும் சாலையில் மழைநீா்த் தேங்கியுள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும், விவசாயக் கூலி வேலைக்கும் செல்வோா் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா்.

மேலும் விஷ பூச்சிகளால் அவதிப்பட்டு வருகின்றனா். மழைநீா் செல்வதற்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை மழை நீா் செல்வதற்கான ஓடை இருந்துள்ளதாகவும், தற்போது தனியாா் ஒருவா் அந்த ஓடையை அடைத்துத் தோட்டத்துக்கு சுற்றுசுவா் கட்டியுள்ளதால் மழைநீா் வெளியேற முடியாமல் மூன்று அடிக்கு மேல் தண்ணீா் தேங்கியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா், கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மனு அளித்தும், தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமலே உள்ளது.

எனவே, நோய்த் தொற்று ஏற்படும் முன் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீரை வெளியேற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அப் பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com