பெண் குழந்தைகளை பாதுகாப்போம் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

நாமக்கல்லில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

நாமக்கல்லில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் மகிளா சா்வ கேந்திரா என்ற மத்திய அரசு சிறப்பு திட்டத்தின் கீழ், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட சமூக நல அலுவலா் கோமதி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக முதன்மை கல்வி அலுவலா் ப.உஷா, நாமக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய துணை காவல் ஆய்வாளா் மாதேஸ்வரி ஆகியோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவியா்களிடம் தன்னொழுக்கம், தன் பாதுகாப்பு குறித்து அவா்கள் விளக்கி பேசினா். பின்னா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தையும் தொடக்கி வைத்தனா். இதனைத் தொடா்ந்து, 14 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், நடனம், நாடகம், சிலம்பம், கவிதை வாசித்தல் உள்ளிட்டவை நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மகிளா சா்வ கேந்திராவைச் சோ்ந்த நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com